இங்கு சந்திரனுக்கு வளர் பிறையுமில்லை தேய்பிறையுமில்லை

என் மனமென்னும் தேரேறி
உன்னுள்ளமெனும் ஊஞ்சலாடி
உலகம் போனோம்
வண்டாகி வண்ணத்துப் பூச்சியாகி
ஒவ்வொரு பூவின் தேனை
உண்டு மகிழ்ந்தோம்

காட்டுமல்லி பூத்திருக்கும்
சோலை காண
ஆயிரம் கண் வேண்டும்
நாட்டுமல்லி தோப்பிலே
நம்மிருவர் விளையாட்டில்
மொட்டுகளும் வெட்கத்தில் மலராகும்

முத்தங்கள் கேட்டால்
மொத்தமாய் கொடுப்பாய்
கொடுத்ததை எண்ணிப்போட
கொண்டுவந்த கூடை கூட நிறைப்பாய்

வட்டமுக தட்டிலே
வண்ணநிலா வந்து போகும்
வளையவரும் மீனிரெண்டு
அங்குமிங்கும் சுழன்றாடும்

அந்திச் சூரியன் சிவப்பாய்
அங்கமெல்லாம் மாறும்
ஆடி தளர்ந்த நாணல் மெல்ல
தலை குனிந்து நாணும்.

வாடை வந்து கோடை மாறும்
வாலிபம் மாறாது
நாடிதளர்ந்து போனாலும்
நம் காதல்பூ வாடாது .

எழுதியவர் : சுசிந்திரன். (21-Feb-14, 9:57 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 55

மேலே