தாய்மை

எம்மை சுமை என்றென்னா தாய்மை - அவள்
பெருமை என்றும் முழுமை!
கயமை இல்லா அன்னை - என்றும்
மேன்மை உள்ள தாய்மை!

சீ..என்றுரைக்காமை அவள் கொள்கை!
இனிமை அவள் சொல் பெருமை!
அவள் பாசம் என்றும் உண்மை!
பொய்மை என்றும் இல்லை அவள் வாழ்வில்

கருமை,வெண்மை - வண்ணம்
பாரா அவள் கொள்கை!
அன்னை அவள் பெருமை - என்றும்
காப்பது நம் கடமை!

எம் வாழ்வில் அவள் காண்பது திறமை!
வறுமை இருப்பினும் இல்லை அவளிடம் சிறுமை
இல்லை அவள் உள்ளத்தில் வெறுமை
பாசம் என்றும் அவளிடம் முழுமை!

அமுதை ஊட்டி வளர்ப்பவள் மேன்மை
எனை வளர்க்க இழந்தாள் அவள் வாழ்வை!
தீமை எனில் கண்டாள் சொல்லில் கடுமை!
நன்மை எனில் வாயில் இனிமை!

எனக்காக எதிலும் அவள் தூய்மை!
எம் சுகம் காண அவள் இழந்தாள் துயிலை!
எம் நோய் கண்டு உதிரிர்த்தாள் கண்ணீரை!
எம்முயர்வு கண்டுதிர்த்தாள் மகிழ்வை!

அன்னை அவள் பெருமை
இவன் புரியாமை - நிதம்
அவள் படும் துயர் அறியாமை!
பாவம் அவள் வாழ்வென்றும் கருமை!

எழுதியவர் : ஜவ்ஹர் (21-Feb-14, 10:11 pm)
Tanglish : thaimai
பார்வை : 285

மேலே