கண்டாங்கி சேல

கண்டாங்கி சேல ..................

கண்டாங்கி சேலை கட்டி
கம்மங்காடு போற பொண்ணே
முந்தான மூடிக்கிட்டு
முகம் மறச்சிப் போவதென்ன?
பின்னாலயே வருவேன்—உனக்கு
பேச்சுத் துண தருவேன்.

அறிவுகெட்ட பய உனக்கு
புரியலயா சொல் எனக்கு
வேல வெட்டி இல்லாமலே
சேல மோப்பம் பிடிக்கிறியோ
வேண்டாமுன்னு தானே—பயலே
விலகி நானே போறேன்.

முண்டக்கண்ணி சண்டாளியே
கண்டபடி பேசாதடி.
தண்ட சோறு திங்கிரேன்னு
தரக் கொறவா எண்ணாதடி.
பொண்டாட்டியா வச்சு—உன்ன
பொன்னால் அழகு செய்வேன்.

முசப் புடிக்கிற மூஞ்சியா நீ
வசப் படுத்தப் பேசிறியா?
எசப்பாட்டுப் பாடாதடா
என்னத் தொல்ல செய்யாதடா
வேல ஒண்ணு தேடு—அப்புறம்
வெளங்க வழி பாரு.

நானும் நல்லாப் படிச்சிருக்கேன்
நாலும் வழி தெரிஞ்சிருக்கேன்.
வீணா நானும் இல்லயடி
வேல எழுதிப்போட்டிருக்கேன்.
தபால்காரன் வாரான்—ஆடர்
தாளு தான தாரான்.

இப்பத்தான் நீ ஆம்பள
எனக்கு ஏத்த மாப்புள
அப்பேன் ஆத்தா கூடவந்து
அவசரமா என்னக் கேளு
இப்போப் போறேன் நானு---சாமி
என்ன விடு ஆளு.

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு:--அன்பர்களே!
“கரிசல் மண்ணில் ஒரு காவியம்”
அத்தியாயம்—12(179908)
வெளியாகியுள்ளது.படித்துத்தான் சொல்லுங்களேன்!

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (22-Feb-14, 1:39 pm)
பார்வை : 893

மேலே