பிழைகள்

நான்
எழுதுகிற கவிதைகள்
அத்தனையும் பிழைகள்...

நான்
பாடுகிற பாடல்கள் -
அத்தனையும் சிலைகள்...

யார்க்கென்று தெரியாமல்
எதற்கென்று புரியாமல்
விரயமாகும் எந்தன் கலைகள்!

ஏனென்று தெரியாமல்-
என்னவென்றே புரியாமல் -
நெஞ்சுக்குள் ஏதேதோ அலைகள்!

என் கவிதைகளைத் திருத்தித் தரும்
கவிஞன் யார்?

என் பாடல்களுக்கு உயிரூட்டும்
இசைச்சிற்பி யார்?

என் நெஞ்சை எனக்குக் காட்டும்
இறைவன் யார்?

என் நெஞ்சைப் பண்படுத்தும்
கலைஞன் யார்?

நான் மீட்டுகிற வீணையின்
அத்தனை ஸ்வரங்களும்
அபஸ்வரங்கள்...

நான் ஓட்டுகிற படகிலே
துடுப்பிருந்தும் ஓட்டைகள்!

எழுதியவர் : மனோ & மனோ (22-Feb-14, 4:42 pm)
Tanglish : pilaikal
பார்வை : 102

மேலே