உனை என்றும் நினைக்கிறேன்

உற்ற
துணையாக நான் இருக்க
உனை
என்றும்
நினைக்கிறேன்...

உற்ற
உறவாக நான் இருக்க
உனை
என்றும்
பார்க்கிறேன்...

உற்ற
உயிராக நான் இருக்க
உனை
என்றும்
அழைக்கிறேன்...

உற்ற
மனதாக நான் இருக்க
உனை
என்றும்
தொடர்கிறேன்...

உற்ற
கனவாக நான் இருக்க
உனை
என்றும்
சுமக்கிறேன்...

உற்ற
உடலாக நான் இருக்க
உனை
என்றும்
கடக்கிறேன்..

எழுதியவர் : லெத்தீப் (23-Feb-14, 1:00 am)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 127

மேலே