ரவுடிகளின் அடையாளங்கள்

ரவுடிகளின் அடியாளம்
காது வளையம் அல்லது கடுக்கணில்
முடி அலங்காரத்தில்
அணியும் ஆடைகளில்
வண்டியின் நம்பர் பிளேட் வடிவில்
நம்பர் எண்களின் வடிவில்
சட்டை வண்ணம் மற்றும் பட்டன்களில்
கழுத்தை ஒட்டிய நாய்ப்பட்டைச் செயினில்
மணிக்கட்டு அருகே உள்ள காப்பில்
வண்டி ஒலிப்பானின் மிரட்டும் ஓசையில்
தோளில் செல்பேசி தாடையில்
தாங்கியபடி தலைதெரிக்கும் வண்ட்டியோட்டம்
மின்னல் வேகப் பயணத்தில்
உதிர்க்கும் ”பச்சை” வார்த்தைகளில்

இவை எல்லாமே
அல்லது
ஒருசிலவற்றில் மட்டும்

(சில அப்பாவிகளும் ஆசைப்பட்டு இந்த
அடையாளங்களில் ஒன்றிரண்டை விரும்பி அணிந்தது கொள்ளும் வாய்ப்பும் உள்ளது )

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (23-Feb-14, 1:07 am)
பார்வை : 739

மேலே