ரயில் பயணம்

நிலக்கரியை அள்ளிப் போட்டு
பாய்லரில் எரித்து - நீரை
நீராவி ஆக்கி
நீராவி என்ஜின் மூலம்
ஓடியது புகை வண்டி
அது புகை மிகுந்த வண்டி !
நானும் பயணம் செய்தேன் – அன்று
டீசல் எரி பொருள் அகி
டீசல் என்ஜின் மூலம்
கிடைத்த மின்சாரத்தை கொண்டு
மோட்டாரை இயக்கி
ஓடுகின்ற ரயில் இன்றும் நேற்றும்
இது புகை குறைந்த வண்டி ….
கம்பியில் மின்சாரம் ஓட
அதை தழுவி, தொட்டு
மின்சாரத்தில் மோட்டாரும் இயங்க
மின்சார ரயில் ஓடுகிறது – இன்று
இதுவே புகை இல்லா வண்டி !

P Murugesa Pandian

எழுதியவர் : P Murugesa Pandian (23-Feb-14, 7:46 am)
பார்வை : 212

மேலே