ஓர் எழுத்தாளனின் கதை-4

தனியார் மருத்துமனை...!

”ஹாய் அங்கிள் ! தினாவுக்கு இப்போ எப்படி இருக்கு.? ” காவியா தினகரனின் தந்தையிடம் கேட்க

“வாம்மா.! தினகரனுக்கு இப்ப ஒன்னும் பிரச்சினை இல்லம்மா. எதுக்கும் டாக்டர் சி.டி ஸ்கேன் எடுக்க சொல்லியிருக்கார். எடுத்து பார்த்து ரிப்போர்ட் சொல்றேன்னு சொல்லியிருக்கிறார்.. ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்றேன்னு சொல்லியிருக்காங்க. ம்ம் எங்களை விட நேத்து நீதான் ரொம்ப துடிச்சு போயிட்ட.. உன்னை போல நல்ல பொண்னை இதுவரை நான் பார்த்தில்லம்மா. நன்றிம்மா”

“அங்கிள்..! நன்றியெல்லாம் நீங்களே வச்சிக்கோங்க.. என்னை தனியா பிரிச்சு பேசுறீங்க பார்த்தீங்களா “ என்று மெலிதாய் அழகாய் வசீகரமாய் புன்கைத்தாள்.

நேற்று தினகரன் தீடிரென மயங்கி விழுந்துவிட்டான் என்று மட்டும்தான் தினகரனின் தந்தையிடம் காவியா மற்றும் கல்லூரி தமிழ் பேராசிரியர் சொல்லியிருந்தார்கள். தினகரன் கல்லூரியில் பட்ட அவமானத்தை அவரிடம் சொல்வதற்கு விருப்படவில்லை. அவர் மனம் புண்பட்டுவிடும் என்ற காரணமாகவும் இருந்திருக்கலாம்.

சிறிது நிமிடங்கள் கழித்து கண் முழித்த தினகரன் “ ஹாய் .. எப்ப வந்தீங்க “ காவியாவை பார்த்து தினகரன்.

”என்ன ங்க.. நொங்கன்னுட்டு.. .. கொன்னுடுவேன் படுவா..” அவளையும் அறியாமல் ஒர் உரிமையை தினகரனிடம் காட்டினாள்.
“சரி.. எப்படி இருக்கு உன் உடம்பு..? எங்கப்போனாலும் கூடவே வருதா..? “ காவியா தினகரனை புன்னகைக்க வைத்தாள்.

இதை கவனித்த தினகரனின் அப்பாவும் அம்மாவும் மெலிதாக சிரிக்க,, அங்கு நிலவிய கணத்த சோக சுவடுகள் உடைத்தெறியப்பட்டன. காரணம் காவியாவின் வருகை.

சற்று நேரத்திற்கு பிறகு ..!

தினகரனுக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவன் தலையை பல கோணங்களில் படமெடுத்தது அந்த ராட்சத எந்திரம். பின்பு தினகரனின் தந்தையிடம் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஏதோ தீவிரமாக விளக்கம்
கொடுத்திருக்க..--சூரியன் வான மேகத்தின் பிண்ணனியில் தன்னை மறைத்து மறைத்து விளையாடி கொண்டே அன்றைய தினத்தின் கடமையை முடித்து தன்னை விடுவித்துகொண்டது. --

இரவு மணி 8:15

” ஹலோ தினகரன் இருக்கானா ? “ தினகரனின் தந்தை செல்போனில் தமிழ் பேராசிரியர்.
“ இங்கதான் இருக்கிறான். நீங்க யாரு.. “
” நான் அவன் காலேஜ் தமிழ் லெக்ச்சரர். என் பேரு மணிமேகலை “
“ ஓ மேடம் நீங்களா... சாரி .. நேத்து நீங்க ஹாஸ்பிட்டல தினகரனை அட்மிட் பண்ணிப்பா பதற்றத்துல உங்ககிட்ட எதுவும் சரியா பேசமுடியல. இருங்க தினகரன் கிட்ட தரேன்.”

“ ஹாலோ மேம் .” தினகரன்

” எப்படி இருக்க..,, சரி நாளைக்கு காலேஜ் வருவ இல்ல.. “

“ ம்ம்ம் வருவேன் மேம். நான் நல்லா இருக்கேன் மேம் “

“ சரி நேத்து நடந்ததை பத்தி நினைச்சுட்டு இருக்காதே... அது கனவா நினைச்சுக்கோ.. உங்க அப்பாகிட்டயும் அதபத்தி எதுவும் சொல்லலா.. நீ எதாவது சொன்னீயா”

“ இல்ல மேம் . தேவையிருக்காது. வேண்டாம்ன்னு நினைச்சேன் “ அருகில் இருக்கும் தன் தந்தைக்கு புரியாத போல நாசூக்காக பேசினான்.

“ சரி நல்லா தூங்கு .. ! நாளைக்கு பார்க்கலாம்”

“ ஒகே மேம் குட் நைட்”

தினகரன் இயல்பாக பேசினாலும் அவன் மனதிற்குள் கவியரங்க சம்பவம் ஆறாத வடுவாக அமைந்துவிட்டது. அவன் மனதில் தீர்க்கமான ஒரு முடிவு எடுத்திருந்தான். அதை நாளை கல்லூரிக்கு சென்றவுடன் காவியாவிடம் சொல்லிடவும் முடிவு செய்திருந்தான்.

அடுத்த நாள்..
கல்லூரி கேண்டீன்..!

காவியாவும் தினகரனும் தேநீர் அருந்திக்கொண்டே...


“ மேம் பார்த்தீயா.. “ காவியா கேட்க தினகரன் பதில் சொல்கிறான்.

”ம்ம் பார்த்தேன். ஆறுதல் சொன்னாங்க அவ்வளவுதான் . ம்ம்ம் . காவியா ! உன்கிட்ட ஒன்னு சொல்லனும். காரணமெல்லாம் கேட்க கூடாது.சரியா? “

“ ம்ம் என்ன சொல்லுடா ... டா போடலாம்ல.. எனக்கு இது பிடிக்கும் “

“ ம்ம் சரி உன் இஷ்டம். இனி நான் கவிதை எழுதமாட்டேன். எனக்கு பிடிக்கல. போதும் நான் பட்ட அவமானம் “

கவிதை எழுகிறான் என்பதால்தான் தினகரனின் மீது ஒர் ஈர்ப்பு வந்து அது நட்பாகி வளர்ந்து வரும் வேளையில் தினகரன் இப்படி சொல்லுவான் என்று காவியா எதிர்பார்க்கவில்லை

“ என்ன சொல்ற நீ....? காரணம் கேட்ககூடாதுன்னு சொன்ன.. காரணம் எனக்கு புரியுது. உனக்கு திக்கு வாய் ப்ராப்ளம். உன்னால சரியா ஸ்டேஜ் ப்ரெசன்ஸ்டேசன் பண்ண முடியாதுன்னு நீயே உனக்கு காம்பளக்ஸ் கிரியேட் பண்ணிக்காதே “

“ அப்படீன்னு இல்ல.பட் எனக்கு பிடிக்கல “

“ கவிதை எழுதமாட்டேன்னு சொன்னா என்கிட்ட பேசாதே... இப்படி கோழையா இருக்க..! மேடை ஏறி பேசினாதான் கவிதையா. ஏன் எழுதினா கவிதைன்னு யாரும் ஒத்துக்கமாட்டேன்னு சொன்னாங்களா “

“ அப்படிலாம் இல்ல.. நான் இங்க படிக்கதான் வந்திருகேன். அத மட்டும் ஒழங்கா பண்ணினா போதும்ன்னு நினைகிறேன் ப்பா “

“ அப்பா.........! பாருடா.. படிக்க வந்தீங்களோ...? நாங்க மட்டும் மாடு மேய்க்கவா வந்திருக்கோம்.. “

குபீரென சிரித்தான் தினகரன். முகம் மலர்ந்த இருவரும் தோழமை பூக்களாய் புன்னகையை பரிமாறிக்கொண்டனர்.

” தினா..! உன்கிட்ட இருக்கிற டேலெண்ட் சம்திங் ஸ்பெஷல் டா. எல்லாருக்கும் எழுத வராது. எனக்கு கூட குரல் நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. பட் கவிதை எழுத தெரியாதே . ஓகே வா... இந்த கவிதைன்னு ஒன்னு இல்லாமா இருந்தா இந்த உலகம் என்னாவாகி இருக்கும் தெரியுமா....? யோசி !! யோசி !! .
உனக்கு இருக்கிற ப்ராப்ளம் நத்திங்டா.... சைக்காலாஜி படிக்கிறோம்.. ஸ்சோ உன் திக்குவாய் நல்லவாயா உன்னாலேயே மாத்திக்கலாம் “

“ ம்ம் நல்லா பேசுற காவியா. பிடிச்சிருக்கு “ என்றான் தினகரன்.

அந்த “ பிடிச்சிருக்கு “ என்ற வார்த்தையில் பல அர்த்தங்களை கண்டுப்பிடிக்கலாம், ஆம் காதல் பூக்கும் தருணங்களில் .........!

காவியாவிற்கு தினகரனின் “ பிடிச்சிருக்கு “ என்ற வார்த்தை அவளுக்கு பிடிச்சிருக்கு.

ஆனால் தினகரனுக்கு காதல் என்றாலே கசப்பு மருந்தை சாப்பிடுவதை போல வெறுக்கும் குணம் கொண்டவன்.

கசப்பு மருந்தை இனிப்பு தேனாக மாற்றிடுவாளா காவியா. ? தினகரனின் வாழ்க்கையில் காதல் கவிதை வாசிக்கப்படுமா?
கேள்விகளுக்கு பஞ்சமில்லை. விடைகள் தான் எப்போதும் ஒர் ஆச்சரியக்குறியை தாங்கி கொண்டிருக்கும்.
தினகரனின் மருத்துவ அறிக்கையை போல....!

--(தொடரும்)

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (23-Feb-14, 7:56 am)
பார்வை : 276

மேலே