சாபம்-15

மனோகர் விழுந்த இடத்தில் படமெடுத்தபடி ஒரு கருநாகம் இருந்தது அதை அசோக் பார்த்துவிட்டான்
அது மனோகரை கொத்த வந்த சமையம்,,,

பாய்ந்து அவரை விலக்கினான்,,,, இதனால் அவனுக்கு அந்த கொத்து விழுந்தது,,, வலியில் அலறினான் அசோக்

மனோகருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை
பின்னால் திரும்பி பார்த்தார்,,,,,, அந்த புயல் மறந்து போயிற்று

அங்கே புழுதி புயல் வந்ததற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை

"என்னய்யா யாரு நீங்க?" - குரல் கேட்டு திரும்பினார் மனோகர்

அங்கே ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார்,,, அவரிடம் ,

"நாங்க வெளியூர் "ஸ்வர்ண காடு" போகணும் இவர பாம்பு கொத்திட்டு கொஞ்சம் உதவி பண்ணுங்க" - கேட்டார் மனோகர்


"என்ன ஸ்வர்ண காடா???" - கேட்ட பொழுதில் பெரும் அதிர்ச்சி தெரிந்தது அவர் முகத்தில்


"ஏன்ய்யா சாக ஆசையா உனக்கு???"

"ஐயா!!! மத்ததெல்லாம் அப்பறமா பேசிக்கலாம் முதல இவர காப்பாத்த உதவி செய்ங்க "- தன் நிலையை எடுத்துரைத்தார் மனோகர்

"பக்கத்துலதான் என் வீடு இருக்கு அங்க கொண்டுவாங்க"- என்று சொல்லிவிட்டு போனார்

மனோகரும் அசோக்கை மெல்ல நடத்தி கூட்டி கொண்டு போனார்

அந்த முதியவர் , சிறியாநங்கை இலை பறித்து அந்த பாம்பு விஷம் பட்ட இடத்தில் அதன் சாற்றை உதறினார்,,,,

பின் அந்த பாம்பின் விஷத்தை வாய் வைத்து உறிஞ்சி துப்பினார்,,,,,,,,


"எப்பா எவ்ளோ விஷம்?? இந்த விஷத்துக்கு நீ உயிர் பொலச்சது அபூர்வம் தான்"


"நன்றி ஐயா"- என்றார் மனோகர்

"சரிங்க,,,,, நீங்க ஏன் ஸ்வர்ண காடு போகனும்குரீங்க" - கேட்டார் அந்த முதியவர்

"அந்த காடு பத்தி சில ஆராய்ச்சி செய்யபோறேன்"

"செஞ்சி"

"அத புத்தகமா வெளியிட போறேன்"

அந்த முதியவர் மெல்லிய புன்னகை ஒன்று உதிர்த்தார்

"தம்பி !!! நீ புத்தகம் போட அந்த காடு வெறும் காடு இல்ல அதுக்கு பின்னாடி ஒரு சரித்திரமே இருக்கு"


"அத தெரிஞ்சிக்கத்தான் நானும் வந்துருக்கேன்"- என்றார் மனோகர்


"சில விஷயங்கள் தெரியாம இருக்குறது தான் நல்லது தம்பி"- அந்த வார்த்தையில் எவ்வளவோ அர்த்தங்கள் என்பது அப்போது மனோகரனுக்கு
புரியவில்லை அவர் புரிந்து கொண்டதெல்லாம் அந்த முதியவரின் சிரிப்பில் எதோ உள்ளது என்பது மட்டும் தான்


"சரி தம்பி விஷம் எடுத்துட்டேன் ஆனா இன்னைக்கு இராத்திரி பூரா இவரு தூங்காம இருக்கணும் ,,,, பாத்துகோங்க"


"அய்யா !! நாங்க ஊருக்கு புதுசு இங்க தங்க ஏதாவது இடம் இருக்குமா???"- கேட்டார் மனோகர்


"அதுகென்ன இந்த வீட்டுலயே தங்கிகோங்க"

"நன்றி ஐயா " - கூறிவிட்டு அங்கயே தங்க ஆயத்தமானார் மனோகர்


அந்த முதியவர் இன்னும் அந்த மர்ம சிரிப்போடு

"வா மனோ!!! எப்படி உன்ன என்கிட்டே வரவச்சேன் பாத்தியா??"""""




(விரட்டும்,,,,,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (22-Feb-14, 3:10 pm)
பார்வை : 420

மேலே