உன் புன்னகையின் வலிமை
அரியணை ஏற - நான்
ஆசைப்படவில்லை - என்
இனியவனே - உன்
ஈர்க்கப்பட்ட விழி வழியே
உள்ளம் தொட - இளமை
ஊஞ்சல் ஆடியது - பல
எளிமையான உணர்வுகளுடனே.. - ஆயினும்
ஏமாற்றங்கள் என்னோடு தந்து சென்றாய்,
ஐதாகி என் நெஞ்சை பிரிந்து சென்றாய்!
ஒன்றல்ல என்னுள் - உன்னால்
ஓராயிரம் வலிகள் - தந்துவிடு
ஒளஷதம் ஒன்றாய் உன் புன்னகைதனையே!