ரசித்தேன்
உன் கண்களை ரசித்தேன் !
உன் கண்களை அல்ல அந்த கண்களின் உள்ள
என் உருவத்தை !!
உன் புன்னகை ரசித்தேன் !
உன் புன்னகை அல்ல அந்த புன்னகையில் உள்ள
என் சிரிப்பை !!
உன் இதய துடிப்பை ரசித்தேன் !!
உன் இதய துடிப்பை அல்ல அந்த துடிப்பில் உள்ள
என் பெயரை !!
உன் நடையை ரசித்தேன் !
உன் நடையை அல்ல அந்த நடையில் பறிபோன
என் மனதை !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
