பன்னிரெண்டாம் வகுப்பு

பன்னிரெண்டாம் வகுப்பு
அதிகாலை முழுக்க அலறிய கடிகாரம் பழுதில் உள்ளது...........................

உறக்கம் கூட தவணை முறை ஆனது;
நிமிடங்கள் யாவும் நொடிகள் ஆகும் நாட்கள்;

கனவை கலைக்கும் அடுத்த நாள் தேர்வு பயம்;
கானல் நீர் போன்ற உடல் நிலை மாற்றங்கள்;

பெற்றோரின் உரிமையான மிரட்டல்கள்;
ஆசிரியரின் முறையான கண்டிப்பு;

நண்பர்களுடன் நேரம் செலவிட முடியாத
இந்த ரனமான நாட்கள்.................................

படிக்க படிக்க ஏறாத மதிப்பெண்கள்;
இருந்தாலும் குறையாத நம்பிக்கை;

பல எதிர்பார்ப்புகள்,பல கனவுகள்;
பழகப்படும் பல தேர்வுகள்;

விதைக்கப்பட்ட விதைகள் யாவும் ஆண்டு
இறுதியில் அறுவடை செய்யப்படும் ;

நாம் விதைக்கப்பட்டு விட்டோம்; இனி அறுவடை
செய்யப்பட இருக்கிறோம்,

உழைப்பிற்கு ஏற்ற விளைச்சலை பெற
இன்றிலிருந்தே முற்படுவோம் ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

எழுதியவர் : ச.நிவேதா ஸ்ரீ (24-Feb-14, 5:54 pm)
பார்வை : 275

மேலே