அனபுகொள்வோம் அணைவரிடமும்

அனபுகொள்வோம் அணைவரிடமும்

அன்பு கொண்ட உள்ளங்கள்
மண்ணில் ஏராளம்
அதை தேர்ந்து
அன்புகொள்
அதுவே உனக்கு தாராளம் .........!

இதை தவிர்த்து
இறைவனிடம் மன்றாடி என்ன பயன்
மண்ணில் நாம் வாழும் வரை
மற்ற உயிர்களிடம்
அன்பு கொள்வோம்.......................!

மன்னிக்க தெரிந்தவன்
மனிதன் என்று மாமேதைகள்
சொல்ல கேட்டிருக்கோம்
மறந்தும் கூட
மன்னிப்பை பரிசளிக்க
மறுக்காதீர்கள்...............................!

வாழ்க்கையில் என்னத்தை
சாதித்து விட்டோம்
அப்புறம் ஏனிந்த
அலட்டல்! ஆரவாரம்
ஆடம்பரம்......................................!

கடிகார முள் சுற்றுவது கூட
தெரியாமலே
காலத்தை கடத்தும்
மனிதர்களே
கண்டிப்பாக பிறரிடம் நாம்
காட்ட வேண்டியது
அன்பை மட்டுமே தவிர
அதிகாரத்தையல்ல..................!

ஆணையிட்டு பெருவதற்க்கு
அன்பு என்ன அடிமை
பொருளா?
இந்த அண்டத்தின் அற்புதம்
அந்த அன்புக்குத்தான் நாம்
அடிமை என்று
ஏன் உணர மறுக்கிறோம்......!

இந்த எந்திர வாழ்கையிலே
நாம் இழந்தது அன்பை
மட்டுமல்ல
நமக்காக மட்டும் உயிர் வாழும்
அன்பு தாய் தந்தையரை
பாசத்தை பகிர்ந்தளிக்கும்
உடன்பிறப்புக்களை
உள்ளம் குளிரவைக்கும் உண்மை
நண்பர்களை
இன்னொரு உலகத்தை நமக்கு
அடையாளம் காட்டும்
அன்பு காதலர்களை..............!

எழு வயதிலே எட்டில்
எழுதிணோமே அன்பே சிவமென்று
அதை எழு ஜென்மங்கலானாலும்
மறக்கமாட்டோம் என்றோமே
மறந்து நிற்கிறோமே
இன்று மண்ணிலே...............!

அறிவுரை கூறுவதற்க்கு கூட
அன்பை காட்டுங்கள்
ஆத்திரத்தை காட்டாதீர்கள்
அது மனிதனுக்கு அழகல்ல!

மானிட பெருமக்களே
உங்களுக்கு அன்பு காட்ட
தெரியவில்லை என்றால்
அந்த பறவைகளிடமிருந்து
கற்றுகொள்ளுங்கள்
கொஞ்சி விளையாடும் குருவிகளிடம்
கற்றுகொள்ளுங்கள்

அன்புடன் சுரேன்

எழுதியவர் : சுரேந்திரன் (24-Feb-14, 7:53 pm)
பார்வை : 94

மேலே