ஆத்து மணலோரம்

ஆத்து மணலோரம்
பூத்திருக்கும் மரங்கள்
நிழலில் இருந்து நீயும்
பழகி வந்து சேரு
ஆத்தங்கரை ஓரம்
ஊற்றெடுத்துப் பாரு
ஊரும் தெளிநீரில்
உற்றுப் பார்க்கும் போது
ஓரவஞ்சம் இன்றி
உன்முகத்தைக் காட்டு
ஆத்தங்கரை ஓரம்
அமர்ந்திருக்கும் சாமி
சேத்து வைக்கும் நம்மை
வாழ்த்து அப்பப் பாடு
பிறப்பு இறப்பு நடுவில்
இருக்கும் இடைவெளியில்
இருப்பது தான் வாழ்க்கை
தாலி கட்டி முடித்து
வேலி தாண்டி போயி
இனிய பயணம் செய்வோம்

எழுதியவர் : (25-Feb-14, 11:11 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 99

மேலே