கேளாய் பெண்ணே
என் ராகத்தில்
உன் பாடல் இசைக்கிறாய்
நீ!!
என் வானத் திரையில்
வானவில் வரைகிறாய் நீ ,
ஒரு தூரிகையாய் !!
என்னைச் சுற்றிய
காரிருள் விலக்க வந்த
பொன் மஞ்சளில்
குழைத்து எடுத்த
தங்கத் தாரகை நீயே !!
என் செய்கைகள் ஆனால்
உன் உணர்வுகள் !!
என் இதய ஓசை
கேளாய் நீ !அங்கே உன்
ஸ்வரங்கள் சப்திக்கின்றன
ஓர் உயிரின் ஓசையென!!