கொள்ளி வைப்பதற்கு

அடர்ந்த காடுகள்
கொடிய விலங்குகள்
இவைகளுக்கிடையில்
பத்திரமாய் பயணம்
செய்ததுண்டு.

சென்னை மாநகரில்
ஒத்தையாய்
தெருவோரம் நடந்தாலே
உயிருக்கு
உத்தரவாதமில்லை.

பட்டப்பகலில் நடுரோட்டில்
வெட்டி சாய்ப்பதும்
பூட்டிய வீடுகளில்
களவும் கொலையும்
மலிவாகிப்போனதால்

எங்கும் போவதென்றால்
பெற்ற பிள்ளையை- கூட
அழைத்து செல்லுங்கள்
பாதுகாப்பிற்கல்ல,
கொள்ளி வைப்பதற்கு!

எழுதியவர் : கோ.கணபதி (26-Feb-14, 9:38 am)
பார்வை : 51

மேலே