உடல் தானம் செய்வீர்

வெட்டி வெட்டிச் சாய்த்தாலும்
துளிர் விடும் வாழை!!

வேண்டாமென்று வெறுத்தாலும்
உனை துரத்தும் வெயில்!!

யாரும் இல்லை என நினைத்தாலும்
இறக்கும் வரை இருக்கும் நிழல்!!

இரத்தம் மட்டும் உறையும்
இறந்தபின்னும் நகம் வளரும்!!

இறந்தும் உலகில் வாழ்ந்திட
உடல் தானம் செய்திடுவீர்!!

சிறுகுறிப்பு :வாழை -சந்ததி,வெயில் -கஷ்டம்
-- -- -- -- -- இரத்தம் -உன் குடும்பம்,நகம் -நீ

எழுதியவர் : கனகரத்தினம் (26-Feb-14, 11:33 am)
பார்வை : 92

மேலே