பாலையில் பெய்த மழை
கோடையில் பாலையில்
வீசுது அனல் காத்து
கனல் காத்து பெருங் காத்து
சுழன்று மேல் எழுகுது
காய்ந்த மணல் பூமி
இரத்த சிவப்பாய் மாறியது
வானம்
ஒ ஒ வென்ற போர்முரசோசை
இல்லை இடியோசை
இராமன் விடுத்த அம்பென
கொடி மின்னல்
கொட்டியது பாலையில்
கோடை மாமழை
பாலையும் நனைந்தது
மக்கள் மகிழ்ந்திட