ஓவியம் பாடுதடி

ஓவியம் பாடுதடி!

ஓவியம் பாடுதடி-எனக்குள்
உள்ளுயிர் கூடுதடி.
ஆவியும் தேடுதடி-உன்
அழகினில் ஆடுதடி.

படைத்தவன் விரல்களிலே
கிடைத்தநீ பொற்பத்திரமே!
அடைந்தஎன் உயிரினையே
குடைந்தநல் பேரழகே!

வரைந்தவன் சிந்தையிலே
வளர்ந்த கலைவடிவே!
நிறைந்தென் நெஞ்சத்திலே
கிளர்ந்தெழு கவியடியே!

எழுதிய தூரிகையே!
முழுதாய்க் களித்தாயோ!
பொழுதும் திளைத்தாயோ!
புழுங்கினேன் அறிவாயோ!

வண்ணங்கள் எத்தனையோ!
எண்ணங்கள் அத்தனையோ!
ஒண்ணும் பாக்கியில்லை.
உன்னிடம் தேக்கினனோ!

பார்ப்பவர் பத்திரமே
பழகும் சித்திரமே!
நேர்வதும் என்னாகும்
ஊறுதே என்செய்வேன்?

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (27-Feb-14, 11:49 am)
பார்வை : 688

மேலே