வெட்டுக்கிளி

காய்ந்த நிலத்தில்
பிளந்து கிடக்கும்
களிமண்களுக்கு
இடையில் வசிக்கிறது
அந்த வெட்டுக்கிளி,

சிறுவன் துள்ளி
குதித்து ஓடுகிறான்
சிதறிய சிறு சிறு மண் துகள்கள்
பிளவுகளுக்கு இடையே விழுகிறது !

அதோ!
அந்த
வெட்டுக்கிளியும்
குதிக்கிறது,

விளையாடல் எதிர்
பாராமல் விழுந்தது
மண்துகள்,

எதிர் பார்த்ததா
வெட்டுக்கிளி!

பாவம் என்று
பரிதவித்த
வான்மேகம்
கண்ணீர் சிந்தியது
மழை நீராய்,

நீர் நிரம்பி
இடம் தெரியாமல்
போனது பிளவுகள்,

வசிக்க இடம்
இல்லாமல்
வாடுகிறது
வெட்டுக்கிளி!!!

வாழ்வுகொடுங்கள்!

பரிதாவத்துடன்............

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (28-Feb-14, 10:06 am)
பார்வை : 470

மேலே