பெருவட்டரும் துதிபாடிகளும்

நாகர்கோவில் வட்டார வழக்கு
வட்டாரச் சொல்-பொருள் கதையின் இறுதியில்

Keywords: பெருவட்டர்,சமபந்தி,திருவிழா
“என்ன பெருவட்டரே அதிசயமா கோயில்ல காணுது?”
“திருவிழா இல்லியா, அதுவும் நம்ம இல்லாம திருவிழாயா?!”
“அது சரிதான் நீரு இல்லாம எப்பிடி கொடியேத்தம் நடக்கும்?”
“கரக்டா சொன்ன டே வர்கீஸ் நம்ம பயவளும் சொல்லுவானுவா உம்ம கை பட்டா தான் கொடி ஏறும்ணு”
“அய்யோ கரண்டு போச்சே!”
“டேய் அந்த ஜெனரேட்டர் எங்க டே?”
“நான் இங்க இருக்கியேன்”
“ஓய் உம்ம இல்ல ஜெனரேட்டர”
“ஓ! எனக்கு பெருவட்டரேண்ணு கேட்டுது”
“கேக்கும், கேக்கும் ஓடி போவும் பயவ குத்தி கரண்டு எடுக்கட்டு”
“லே செவத்தியான் எனட்ட விளையாடாத எனக்க சுபாவம் உனக்கு தெரியுமில்லா”
“ஒண்ணாந்திருவிழாய்க்கே வெள்ளம் அடிச்சிட்டு வந்து அலம்புறீரே ஓய், ஒமக்க தலையில கொஞ்சமாது வெவரம் இருக்கா?”
“ஆ! ஆ! கரண்டு வந்தாச்சு”
“எல்லாம் நம்ம பெருவட்டரால தான்”
“எப்பிடி?”
“எல்லாரும் இ.பி ஆபீஸ்க்கு தான் போன் பண்ணுவினும், ஆனா நம்ம பெருவட்டர் அண்ணன் மின்வாரி துறை அமைச்சர் நாத்தம் விஸ்வநாதனுக்கே போன் போட்டுச் சொல்லிட்டாருண்ணா பாத்துக்கோ!!”
“ஆனாலும் நீரு பெரிய ஆளு தான் ஓய்”
(பெருவட்டர் காலரைத் தூக்கி விடுதல்)
“நமக்கு அந்த ஆள பண்டே தெரியும், எனக்க கூட அஞ்சாவது வர படிச்சான் நான் என்ன சொன்னாலும் கேப்பான் ஹெ ஹே”
“பெருவட்டரே கொடி ஏறப் போவுது”
பெருவட்டரு வேட்டிய சவுட்டிட்டு ஓடுனதுல அண்டராயரோட கொடிமரத்து கிட்ட போனாரு, ஒரு வழியா கயித்துக்க நுனிய பிடிச்சு தொங்கினாரு.நல்லவேளை எல்லாரும் கொடிய அண்ணாந்து பாத்ததுல பெருவட்டருக்க கோமண கொடிய பாக்கலை.அவருக்க துதிபாடில ஒருத்தரான வர்கீசு தான் ஓடி பெய் வேட்டிய கொண்டு நெஞ்சுல ஏத்தி கட்டி விட்டாரு
எல்லாரும் போன பிறவு,
“நான் இல்லாம கொடி ஏறுமா வர்கீசு?!”
“பெருவட்டரே நீரு இல்லாம இந்திய கொடியே ஏற மாட்டேண்ணுல்ல சொல்லுதாம்”
இத கேட்டுட்டு நின்ன ஸ்கூல் பயவ,
“ஓய் வர்கீஸ் அண்ணா அண்ணு சுதந்திர தினத்துக்கு இவருதான் பள்ளிகொடத்துக்கு கொடியேத்த வந்தாரு, கொடிய மேல ஏத்திட்டு அதுல பூ விழதுக்கு உள்ள கயித்த இழுக்கச் சொன்னா மத்த கயிற பிடிச்சு தொங்கிட்டிருந்தாரு ஹே…ஹே..”
“வர்கீசு அந்த பயவள விரட்டு நம்ம மானத்த வாங்கேதுக்கே வருவானுவ………., சரி ஒண்ணாந்திருவிழா புரோக்ராம் என்னடே?”
“நீரு அஞ்சு வருஷமா பாத்துட்டிருகிற அதே நாடகம் தான்”
“அதே நாடகமா?!!!! …… ச்சே! சரி, நம்ம தொந்தியூஸ், கப்பியாசு, சோனமத்தான் எல்லாம் எங்க?”
“எல்லாவனையும் மூணாந்திருவிழாய்க்கு காணுலாம்”
“மூணாந்திருவிழாய்க்கு என்னடே விசேஷம்?”
“அன்பு விருந்து அதாவது சமபந்தி”
“சமபந்தியா?! கழிஞ்ச தடவ நான் ஒரு ஆடு கொடுத்தன் கேட்டியா ஆனா எனக்கு ஆட்டுக்க வாலு துண்டு கூட கிடச்சேல”
“பெருவட்டரே இந்த தடவ விடப்பிடாது”
3ஆம் திருவிழா……,
“ஓய் பெருவட்டரே” (கோரஸ்)
“ஆ!பொந்தியூஸ், கப்பியாசு, சோனமத்தான், வர்கீசு எல்லாம் வந்தாச்சா?”
“என்ன சாப்பாடு முடிஞ்சா?”
“இல்லடே இனிதான், இன்னா விளம்பிட்டு நிக்கியானுவா இல்லா இந்த பயவள சும்மா சொல்லப் பிடாது கேட்டியா, பில்லு போல இல்லா நிக்கியானுவா”
“பெருவட்டரே இந்த பந்தியில இருபோம் இல்லண்ணா ஆட்டுத்தோலு கூட கிடச்சாது”
“எல்லாம் தெரியும்டே பேசாம இருங்கா”
(8 பந்தி முடிஞ்சு இறச்சி காலி…….)
“என்னது ஆடு கொடுத்த எனக்கு இறச்சி இல்லியா?, வர்கீசு குப்பிய எடு”
“பெருவட்டரே வேண்டாம்”
“எடுல குப்பிய”
“சரி உம்ம இஷ்டம், பிடியும்”
(க்ளக் க்ளக் ஃபுல் பாட்டில் காலி)
“ஏவ்….எனக்கு கறி இல்லண்ணு சென்னது யாருடே , நான் இப்பவே கறி அண்டாவ பாக்கணும்”
(பெருவட்டர் குடு குடுண்ணு குஸ்னியை பாத்து ஓடுறாரு…)
“வர்கீசு அண்ணா பெருவட்டர ஆள காணலியே டே , என்னாண்ணு பெய் பாப்போம்”
“அங்க பாரு அணடாக்குள்ள பீஸ் தேடிட்டிருக்காரு”
“இவன் ஒருத்தன் வெள்ளம் அடிச்சுட்டு அண்டாக்குள்ள விழுந்து கிடக்கியாரு டே, தூக்கு தூக்கு”
(மயக்கத்துல இருந்த பெருவட்டருக்கு தண்ணி தெளிச்சாச்சு)
“பெருவட்டரே, பெருவட்டரே எந்திரியும் ஓய்”
…………………………………………………..
………………………………………………………..
“ஆ!!! ள்டேய்”
“எழும்பிட்டாருடே”
“டேய் ஒம்பழாந்திலுவிழாய்க்கு நான் தான் ஷப்பறத்தை ஸ்டார்ட் பண்ணுவேன்….ஓ கே…”
“ஒம்பதாம் திருவிழாய்க்குமா!!!!!! “
(என்றவாறு அண்டாவுக்குள் பெருவட்டரை போட்டுட்டு கலைந்து போனார்கள்)

பெருவட்டர்-பெரிய மனிதர் தோரணையில் ஊரில் வலம் வருபவர்
செவத்தியான்-ஜெபாஸ்டின்
சுபாவம்- குணம்
அலம்புதல்- சேட்டை
வெவரம்-அறிவு
சவுட்டுதல்-மிதித்தல்
விளம்புதல்-பரிமாறுதல்
பீஸ்-பெரிய இறைச்சித் துண்டு
தூக்கு,தூக்கி விடு-எழுப்பு,எழுப்பி விடு
வெள்ளம் அடித்தல்- மது அருந்துதல்

எழுதியவர் : நிக்கல்சன் (28-Feb-14, 11:25 am)
பார்வை : 272

மேலே