விதியின் விளையாட்டு4

கல்லூரி வளாகத்தில் கால் வைத்ததுமே ரிஷானிக்கு உள்ளூர கொஞ்சம் பயம்தான் காரணம் வகுப்பை கண்டு பிடிப்பதில் கஷ்டமாக இருந்ததால் தான் தயக்கத்துடன் மெல்ல நடந்தாள்.


இவளை பார்த்த சில மூன்றாமாண்டு மாணவர் இவளை பின் தொடர்ந்து கலாய்த்துக்கொண்டு சென்றனர்........

இவளுக்கு துணையாக யாராவது இருந்திருந்தால் அந்த பசங்களை இவளும் கலாயித்திருப்பாள் யாரும் இல்லாததால் வேகம் கூட்டி நடக்க ஆரம்பித்தாள்!


ஒரு வழியாக தன் துறைக்கு வந்து சேர்ந்தாள் அந்த நேரமும் அந்த பசங்க அவளை தான் தொடர்ந்தனர்.

அதிலிருந்த அறை வாசலுக்கு வெளியே முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க chairman மதனும்,நிஷாவும் நின்று rose & சாக்கலேட் கொடுத்துக்கொண்டிருந்தனர்!!!


திரும்பி அந்த பசங்களை பார்த்துக்கொண்டு வந்த ரிஷானி திடீரென்று திரும்ப மதனின் மேல் உரசிவிட்டாள்!

ஓ ஸாரி என்று சொன்னவளை பார்த்த மதனுக்கு அவள் பேசினது காதில் விழவில்லை அவளுடைய கண்கள் மட்டுமே அவன் மனதில் பதிந்து இமை மூடும், திறக்கும் சத்தம் மட்டுமே அவன் காதுகளுக்கு கேட்டுக்கொண்டிருந்தது.......


மதன் அந்த பசங்களை பார்த்து முறைக்கவே அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்!

ரிஷானியை மறுபடியும் அவன் பார்க்க thanks என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

function ல் முதலாமாண்டு மாணவர்களை மேடைக்கு அழைத்து வாழ்த்தி தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள சொன்னார்கள்.


இனிதே நடந்தது; மதன் மட்டுமில்லாமல் பிற மாணவர்கள் சிலரும் ரிஷானியின் விபரங்களை ஆவலுடன் அறிந்துகொண்டார்கள்,,,,,,,,

வீட்டிற்கு வந்த ரிஷானி கட்டிலில் சரிந்தாள்.

தூங்க முடியாமல் தவித்தாள்;

மதனின் காந்த பார்வையால் சுண்டி இழுக்கப்பட்டது இவள் கண்களும் மனதும்......

எத்தனையோ பேர் காதல் சொல்லியிருக்கிறார்கள்! யார் மீதும் காதல் வந்ததில்லை இப்பொழுது இதை என்னவென்று நினைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தாள்!!!!!!


"மீன் போன்ற துடிப்புடையவளை வலைப்போட்டு பிடிக்க நிறைய பேர் முயற்சித்தும் சிக்காதவள், இன்று வெறும் தூண்டிலுக்கே சிக்கிவிட்டாள்" போலும் இதுதான் காதலா? என்று பல எண்ணங்களுடன் கண்மூடினாள்...........


வீட்டில் யாரிடமும் இதை பற்றி பேசாமல் வேறு விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டாள்.

தினமும் கல்லூரிக்கு செல்லும் போதும் வீட்டிற்கு வரும் போதும் இவளின் கண்கள் அவனைத்தேடின, அவனும் தவறாமல் தரிசனத்திற்கு அடிக்கடி வந்துவிடுவான்.

நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன, இருவரும் கண்களால் பேசிக்கொண்டனரே தவிர வார்த்தையால் பேசிக்கொள்ளவில்லை.......

அன்று ரிஷானியின் வகுப்பில் project விஷயமாக இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு, முதுநிலை மாணவர்கள் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தனர் ஆனால் ரிஷானி இன்னும் வந்து சேரவில்லை.

மதன் அவளையே நோக்கிக்கொண்டிருக்க!

வந்து காட்சியளித்தாள்.

இன்று எப்படியாவது தன் காதலை சொல்ல திட்டமிட்டான் மதன்!

இன்னொரு பக்கம் புதிதாக வந்த ஒரு இளம் பேராசிரியர் "ரிஷானி யாரு"
என்று கேட்டுக்கொண்டு உள்ளே வந்தார்,,,,,,,,,,,,




தொடரும்...........

எழுதியவர் : ப்ரியா (28-Feb-14, 3:09 pm)
பார்வை : 292

மேலே