மாடர்ன் ரோமியோ

என் கனவுகள் வழியே
மீண்டும் அழைக்கிறேன்
அவளை........!

அவள் மெதுவாக
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்......
என் இதயத்தை
கொஞ்சம் கொஞ்சமாக
உடைத்து கொண்டிருந்தது.......!

காலம் தாழ்த்தாத
என் கேள்விகளுக்கு
சிறைக்கைதியாய் சிக்கியிருந்தது
பதில்.............
என்னவள் இன்று எனதில்லை.......!

அவளின் இன்றைய
புன்னகையும் கண்ணீரும்
என்னுடையதே.......
நாளைய பொழுதுக்காய்
அவள் விரல்களில் மோதிரம்
நான் இட்டு வைக்க வில்லை........

அதனால் இன்று
என்னவள் எனதில்லை......................!

என் நித்திரை போய்
நினைவெல்லாம் உன் கனவானது......
கனவு யாவும் உன் நினைவினாலானது.....!

இதில் நீ ஆச்சர்ய படுவதற்கு
ஒன்றுமே இல்லை......
உன்னை சந்திப்பதற்கு
முன்னதாகவே உன்னை காதலித்து
கொண்டுதான் இருந்தேன்.......!

என் வாழ்வின்
அத்தனை கதவுகளும்
உன்னை சந்திப்பதற்காகவே
திறந்ததாக உணர்கிறேன்......!

நீயே என்
தனிப்பட்ட உணர்வானவள்.....
என் வாழ்வினும் மேலானவள்........
என் தூய்மையான வலியானவள்............!

உனக்கு நினைவிருக்கிறதா
நாம் காதலை
முதன் முதலாக
பரிமாறிக்கொண்ட அந்த நொடி.......?

நீ உணர்ந்திருக்கவில்லை.....
என் காதலில் மெழுகாய்
நீ உருகியதும்.....
ஒளியாய் நான் ஒளிர்ந்ததும்.....

நீ கேட்டிருக்கவில்லை............
என் அழுகுரலை
உள்ளக் குமுறலை

நீ கவனித்திருக்கவில்லை.................
என் கண்கள் கண்ணீர் சொரிந்ததை
என் இதயம் ரத்தம் சொரிந்ததை


நான் கொடுத்திருந்தேன்,
என் இதயம்
உடல், பொருள்,ஆவி
அனைத்தும் உன்னிடம்........

எப்படி முடிந்தது
உன்னால் மட்டும்,,,
கண்ணீரையும்
வலியையும்,துக்கத்தையும்
கொடுத்து செல்ல............?

இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டும்
இன்றளவும் உன்னை
காதலிக்கிறேன்......

ஈரம் சுமந்த உன்
உதடுகளை உலர்த்திக்கொண்டாய்
காதல் சுமந்த
என் உயிரின் ஈரம் உலராது...........!
நான் இறந்த பின்பும் கூட......




******************வித்யா*****************************

எழுதியவர் : வித்யா (28-Feb-14, 12:40 pm)
Tanglish : maadern romio
பார்வை : 273

மேலே