நிஜம்
வந்துவிடு !! என்றே
பித்துப் பிடித்தது போல்
தினம் உ(ன்)னை யாசிக்கிறேன்;
நீ திரும்பி வர முடியாத் தூரம்
எ(ன்)னை கடந்து சென்றுவிட்டாய்
என்பதை அறிந்தும் !
சிட்டுக் குருவி தான் நான்
என்றாலும் எனக்கோ
சிறகுகள் அளித்தது நீ!
வண்ண மலர் தான் நான்
இருந்தும் என்னிலே
வாசம் தந்தது நீ!
கலங்கமி(ல்)லா நிலவு தான் நான்
ஆயினும் என்னுள்ளே
ஒளி கொடுத்தது நீ!
வானவில்லை போல்
நீ என்னில் வந்து சென்ற
நாழிகைகள்...
கானலை போல்
நீ என்னோடு பேசிச் சென்ற
நிமிடங்கள்...
தெரிந்தும் தெரியாதது போல்,
உணர்ந்தும் உணராதது போல்,
புரிந்தும் புரியாததை போல்,
நீ பிரிந்து சென்றுவிட்டாய்
என்ற நிஜம்!....

