அன்னை மீது என் பாசத்தின் உச்சம்

நீயா கடவுள்?

பாலாபிஷேகத்தோடு பஞ்சாமிர்தம்
கலந்து புளியோதரை மற்றும் பொங்கல்
படையலை பக்குவமாய் ருசித்து விட்டு
கையை உயர்த்தி கேட்கிறாய் நறுமணம் நன்றாக உள்ளதா என்று ?

முக்கவளம் நீ உண்ணுவதை கண்குளிரக்
கண்டுவிட்டு வருகிறாள் கோவிலிலிருந்து
என் அன்னை ஒருவாயும் உண்ணாமல்

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்காக
கண்முன்னே உள்ள என் கடவுள் வருத்திகொள்கிறாள்

உன்னை வேண்டி உருகும் என் அன்னைக்கு
நீ அளிக்கும் வரம் தானா,
விரதம் ??????????????

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (28-Feb-14, 1:37 pm)
பார்வை : 90

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே