முதல் பரிவு

விழிகளில் உன் வடிவத்தை
நிற்கவைத்தாய் ...

முத்துக்களாய் உன் சிரிப்பை
உதிர்த்துவிட்டாய் ...

மனதினுள் உன் நினைவுகளை
மிதக்கவிட்டாய் ...

நினைவெல்லாம் உன் அசைவை
விதைத்துவிட்டாய் ...

காணாத விழிகள் காண
மறுத்துவிட்டாய் ...

கடைசியில் உன் முகவரிக்கு
அலையவிட்டாய் ...

- சு. சுடலைமணி.

எழுதியவர் : சு. சுடலைமணி. (28-Feb-14, 5:59 pm)
பார்வை : 117

மேலே