மௌனமாய் ஓர் வேதனை
கடந்து போன நாட்கள் ,
நடந்து திரிந்த இடங்கள்,
மடிந்து போன நிஜங்களாய்...
தொடர்ந்து ஒலித்த நம் சிரிப்பொலிகள்
இன்று எட்டி விட முடியா
தொலைவுதனில்!
அழிந்து போகா நம் நினைவுகளில்
அலைந்து திரியுது நேற்றைய சுகங்கள்!
கண்ணாடி முன் நின்று பார்த்தால்
என் கலையிழந்த முகமே காட்சியாய்..
பட்டாம்பூச்சியாய் சிறகடித்த நாட்கள்
பட்டென்று காணமல்போய்விட்டது!
கதறி அழ முடியாமல்
மௌனமாய் நான் இங்கு
கண்ணீர் சிந்துகிறேன்,
கலைந்து போன நம்
உறவை எண்ணி!!!