இது ஈவ் டீசிங் அல்ல இயற்கை டான்சிங்
கண்ணடித்தது கதிரவன் காலைப் பொழுதில்-நதியின்
கட்டழகில் நெளிந்தபடி கவிச் சிந்தனை படர விட்டு..!
கடல் போர்வையில் வெட்கம் வந்து
கவிதை நதி தனை மறைக்க....
அலையெனவே ததும்பும் இளமை - நதியின்
அடக்க இயலா குறும்புச் சேட்டை.....!!
காதலிலே லயித்து லயித்து - பாவம்
கதிரவனுக்கும் பரு வெடிப்பு.......
கிரீம் எடுத்து தடவுவதால் - பூமியில்
உருகுகிறது பனி மலைகள்........

