உன் மனைவியாக

உன் கதகதப்பான
உள்ளங்கையில்
என் முகம் புதைக்கையில்
பனித்துளிக்கெல்லாம்
வேர்த்து விடுகின்றது..........!
நம் நிழல்களோடு
நடைபயணம்....
இரவெல்லாம்........
நிலவு........!
கொஞ்சம் கொஞ்சமாக
குறையும் ஈரப்பதம்........
மூச்சுக்காற்றின் வேகம்
நொடிக்கு 100 கி.மீ...........!
மழை நனைத்த
முத்த மழைகள்........
மழைத்துளிகள் இடைவெளியில்
தேடிக்கொண்டே தொலையும்
கண்ணா மூச்சி.......!
விரல் கோர்த்து
விழி பேசி
காதல் கடந்த
கவி உறவில் இணைந்து.....
தொலைத்து
தொலைந்து
தேடி
களைத்து
நெருங்கி
விலகி
இங்கும்
அங்கும்
எங்கும் எங்கெங்கிலும்
என் காதல்...........!
இன்னும் என்ன சொல்ல......?
என் கனவுலகமானவனே.........
இரு இதழ் கொண்டு
வைத்த ஒற்றை முத்தம்
போல.......
இருவருக்குமாய்
ஒரு வானவில்.......!
இந்த முடிவில்லா
பயணத்தின் முடிவை
அதிகரிக்க விளைகிறேன்........
ஆனால் என்ன
உன்னுடனான
முன்பனிக்காலத்தினூடே
முடிந்து விட்டேன்.......!
இனி இப்படியே
செத்தால் கூட
ஒன்றும் இல்லை........!
வானம் விரிந்த
என் கனவுகளை
எல்லாம் கழுவி
கடற்கரையில் ஊற்றினால் கூட
உயிர்த்தெழுந்து வரும்........
உன் மீதான காதலால்.........!
எனக்கு தெரியும்
உன்னோடு இருப்பது
முழுமையானது.......என்று.....
அதிலும்...
உன் மனைவியாக இருப்பது
ஆத்மார்த்தமானது.......!
ஆத்மார்த்தமாக இருக்கிறேனடா.....
உன் மனைவியாக...........!