பிரியத்திற்க்குரியவளே

பிரியத்திர்க்குரியவலை
நினைத்து
எழுதும் மடல்
முடிவானது என்று சொல்ல
வேண்டி இருக்கிறது
சென்ற கடிதமும்
அப்படித்தான்
நான் விரும்பி
வரைந்த ஓவியம் என்
முன்னே நடனமாடி
நடித்தது
சொல்லவந்த
வார்த்தை எழுத்தினுள்
புதைந்த
ரகசியத்தை புரிந்து
கொண்டவள்
புரியாமல் இருப்பதாக
காட்டிக்கொண்டால்
வேடிக்கை
பார்க்கிறேன் வேதனையுடன்
எழுதிகிறேன்
என் எழுத்திற்கு
பேசும் சக்தி இருந்தால்
அவளிடம்
தூதுவனாக அனுப்புவேன்
சிரித்தாள்
நகைத்தாள் என் வார்த்தை
பொய் என்று
உரைத்தவள்
உள்ளத்தில்
உண்மை என்று அவளிடம்
சொல்லாமல்
சொல்லியது
முடிவாக எழுதினேன்
என்னை காதலி என்று