காதல் ஓவியம்

காதல் ஓவியம் வரைகிறேன்
என் உதிரம் கொண்டு
விரல் முனையால்
காவியமான காதலின்
கறை படிந்த ஓவியமிது.

கடலலையின் சங்கமத்தில்
சமாதியான மணல் ஓவியங்களை - என்
மனச்சுவட்டில் வரைகிறேன் இன்று.

நீ எனை பிரிய
உன் நிழலை நான் தொடர - உன்
நிழல் கூட எனை பார்க்க மறுக்கின்றது - உன்
துன்பத்தில் என் அன்பெடுத்து நீ மகிழ்ந்தாய்!
இன்று என் துன்பத்தில்
நீ குதுகலமாவதேனோ!

வாழ்விலும் சாவிலும் ஈருடல் ஓருயிர் என்றமைந்த காதலடி இது
சாவை மட்டும் எனக்களித்து வாழ்கிறாய் என்னோர் உயிருடன் நீ !

நீ பேசிய தேன் வார்த்தைகள்
பொய் என நான் உணர
வார்த்தை மட்டுமல்ல
காதலே பொய் என
நீ உணர்த்திவிட்டாய்!

உனை மறக்க ஒரு நொடி எண்ணினேன் - அந்த
நொடிப்பொழுதிலும் உன்னையே நினைக்கிறேன்!

என் சோலைவனத்தை நீ பாலைவனமாக்கிவிட்டு - நீ மட்டும்
பூவனத்தில் பூமாலை சூடினாயே !
காதல் சுகமானது
என்று எனக்குணர்த்திவிட்டு - நீ
மட்டும் சுகத்தை கொள்ளையிட்டது ஏனோ!
காதலின் வேதனைகளையும் வலிகளையும் எனக்களித்தாய் நீ !
தாங்குமோ! என் இதயம்.
குற்றுயிராய் எனை விட்டு நீ பிரிந்தாய் !
வேண்டாம் என் உயிரையும் நீயே பறித்துவிடு...........

எழுதியவர் : அன்புடன் விஜய் (15-Feb-11, 7:09 pm)
சேர்த்தது : vijeyananth
Tanglish : kaadhal oviyam
பார்வை : 547

மேலே