பட்டம்

புத்தகப்பை சுமந்தபடி

உன் புன்னகை தெரியுதடி;

சீருடைக்குள் ஒளிந்தபடி

உன் மதிமுகம் தெரியுதடி;

பால் நிலா பேசியபடி

பள்ளி செல்ல துடிக்குதடி;

உன் பாவை முகம் பார்த்தபடி

சொர்கமே என் கண்முன் வந்ததடி.

பாடம் நீ படித்தபடி இருக்கையிலே

தேன் அருவி என் காதில் பாயுதடி;

பட்டம் நீ வாங்கும் அழகை

பார்க்க காத்துருப்பேனடி ..............

எழுதியவர் : சு. பிருந்தா (2-Mar-14, 12:23 pm)
Tanglish : pattam
பார்வை : 74

மேலே