Brindaa - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Brindaa |
இடம் | : puducherry |
பிறந்த தேதி | : 16-Jun-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 11 |
lover of literature
YOUR WOMB BECAME MY TOMB
புத்தகப்பை சுமந்தபடி
உன் புன்னகை தெரியுதடி;
சீருடைக்குள் ஒளிந்தபடி
உன் மதிமுகம் தெரியுதடி;
பால் நிலா பேசியபடி
பள்ளி செல்ல துடிக்குதடி;
உன் பாவை முகம் பார்த்தபடி
சொர்கமே என் கண்முன் வந்ததடி.
பாடம் நீ படித்தபடி இருக்கையிலே
தேன் அருவி என் காதில் பாயுதடி;
பட்டம் நீ வாங்கும் அழகை
பார்க்க காத்துருப்பேனடி ..............
உறவில் உருவான ஓர் உயிர் நான்;
குருதியில் குளித்து
அமைதியில் லயித்து
உறங்கி கொண்டிருப்பேன் பத்து மாதம்.
தாயினுடைய மூச்சே எனகுனவாச்சு,
கடுகளவும் கலங்கம் இல்லாமல்
நிசப்தத்தில் நீந்தி குளிபேன்,
ஒவ்வொரு உருப்பும் உருவாக ஆகும் பத்து மாதம்,
நான் ஆண்டவன் கொடுத்த வரமா.......சாபமா....?????
சோலைவனம்
பாலைவனம் ஆனதே;
வேதபுரீஸ்வரம்
வெந்தனலில் வாடுதே;
குழாய்அடி சண்டை
மறைந்தே போனதே;
மாந்தருக்கு கண்ணீரே
தண்ணீர் ஆனதே;
ஐயகோ! அந்தோ பரிதாபம்.
பருப்புக்கும் தண்ணீர் இல்லை
உடல் உறுப்புக்கும் தண்ணீர் இல்லை;
வயலுக்கும் தண்ணீர் இல்லை
வயிற்றுக்கும் தண்ணீர் இல்லை;
ஐயகோ! அந்தோ பரிதாபம்.
தங்கம் சேர்க்கும் மங்கையரே
வரும்காலத்தின் தாகம் தவிர்க்க மாட்டீரோ;
அங்கம் அழுகி போகுமே
தண்ணீர் குடிக்க இல்லையென்றால்;
தண்ணீர் தண்ணீர் என்று அழுது
கண்ணீரே மிஞ்சியதே;
ஐயகோ! அந்தோ பரிதாபம்.