தண்ணீர்தண்ணீர்
சோலைவனம்
பாலைவனம் ஆனதே;
வேதபுரீஸ்வரம்
வெந்தனலில் வாடுதே;
குழாய்அடி சண்டை
மறைந்தே போனதே;
மாந்தருக்கு கண்ணீரே
தண்ணீர் ஆனதே;
ஐயகோ! அந்தோ பரிதாபம்.
பருப்புக்கும் தண்ணீர் இல்லை
உடல் உறுப்புக்கும் தண்ணீர் இல்லை;
வயலுக்கும் தண்ணீர் இல்லை
வயிற்றுக்கும் தண்ணீர் இல்லை;
ஐயகோ! அந்தோ பரிதாபம்.
தங்கம் சேர்க்கும் மங்கையரே
வரும்காலத்தின் தாகம் தவிர்க்க மாட்டீரோ;
அங்கம் அழுகி போகுமே
தண்ணீர் குடிக்க இல்லையென்றால்;
தண்ணீர் தண்ணீர் என்று அழுது
கண்ணீரே மிஞ்சியதே;
ஐயகோ! அந்தோ பரிதாபம்.