மகளே

மகளே

உனது கவுனை
அயர்ன் பண்ணுகையில்

அயர்ன் பாக்சை வைத்து
அழுத்தும்போது.....

அய்யோ
உனக்குச் சுடுமே.....என்று

மெலிதாய் சூடு போட்டுக் கொண்டது
தந்தை என்ற பாச உணர்வு.......

பைத்தியக்காரத் தனமாக - மகளே உன்
பார்வைக்கு இது தெரியலாம் - எனினும்

ஒரு தந்தையின்
பாசத்தை இந்தப் பாரில் உள்ள
நிசப்தங்கள் அனைத்தும் நிச்சயமாய் அறியும்......

கண்ணீர் விட்டு அழுது எனக்குக்
காட்டத் தெரியாதடி உன் மீதுள்ள அன்பை.........!

உன்னைப் பொருத்தவரை நான் எப்போதும்

கண்டிப்புடனேயே வாழ்ந்து விடுகிறேன்
கவனமா நீ படிக்கலேன்னா உத விழும் ஜாக்கிரத...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (22-Feb-14, 1:40 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : magale
பார்வை : 71

மேலே