இனிய அற்புத தருணங்கள்
காலை முதல் இரவு வரை
வார்த்தைகளோடுதான்....
எல்லாம் அர்த்தமாகிறது ...
சில அர்த்தமில்லாமலும் ...
இருந்தும் இல்லாத சில
வார்த்தைகள் ...உறக்கத்தில்
கூட நம்மை சுற்றி சுழலும்
சிலரின் வார்த்தைகள் ......
இனிமையாகவும் ..சில
வன்மையாகவும் .........
வார்த்தைகள் அற்ற மெல்லிய
பூப்போன்ற மௌனம் ...
யாருக்காவது வாய்க்குமா ?
எதையும் நினைக்காத வெற்று
மௌனம் ....சொற்களில் சிக்கி
புதைந்து ஒன்றுமில்லாமல் ..
போகும் நாட்கள் ....
உண்மையான நேசம் ,காதல்
அன்பு எதுவும் வார்த்தையில்
இல்லை ...
சொல்லாத இனிய உணர்வுகள்
சொல்லிடும் ...கண்களும்
பேசும் ஆயிரம் கதைகளை ..
அழியாத அழகு ,உயிரின் நேசம்
இதையெல்லாம் வார்த்தைகள்
வர்ணித்தால் எங்கே புரியும் ?
இனிய அற்புத தருணங்கள்
மனங்களை மயக்கும் ..
மெல்லிய இதழதனை
விரித்திடும் மலராய் ...
மௌன ஊற்றாக......
மனசுக்குள் பொங்கித்
ததும்பிடும் .....சுகமாய் ..