அந்த ஒரு நிமிடம்
அந்த ஒரு நிமிடம்
பிரிந்த நாம் வெகு
நாட்கள் கழித்து சந்திக்கும்
அந்த ஒரு நிமிடம்
உனது விழி ஓரத்தில் ஊற்றெடுக்கும்
நீரை துடைக்க கைகள் துடிக்கும்
அந்த ஒரு நிமிடம்
உனது கண்களிலிருந்து கிளிசரின்
இல்லாமல் வரும் தண்ணீரை காணும்
அந்த ஒரு நிமிடம்
காதலித்த போது எனது கண்களில்
நீர் பெருக்கெடுத்தை எண்ணும்
அந்த ஒரு நிமிடம்
தந்து விட்டேன் எனது மன(ண)ப்பத்திக்கையை
திருமணப்பத்திக்கையை
ஏமாற்றம் என்ன
ஒன் சைடு ஆம்லேட்டா
நாங்களே(ஆண்களே) ஏமாற
என சொல்லத் துடிக்கும்
அந்த ஒரு நிமிடம்