நானும் பதரினமே

உள்ளோர் மீது கல் எறியும்!
சென்ற பின்பு சிலை வைக்கும்!
இது பதருகள் நிறைந்த பாருலகம்!
இப்பாரினுள் நானும் பதரினமே!!!!

விளக்கம்: ஒருவர் நம் அருகில் இருக்கும் பொழுது அவர்கள் அருமை தெரியாமல் ஏசுகின்றோம். அவர்கள் நம்மை விட்டு சென்ற பின்போ இல்லை மறைந்த பிறகோ தான் அவர்கள் அருமை உணர்ந்து போற்றுகின்றோம். மனிதர்களின் அருமை உணராத மதிகெட்டோர் நிறைந்த உலகம் இது. இந்த மதிகெட்ட உலகினில் நானும் ஏன் நீங்களும் ஒருவர் தான்.

எழுதியவர் : (2-Mar-14, 6:38 pm)
பார்வை : 158

சிறந்த கவிதைகள்

மேலே