வேண்டும் ஒரு புது பிரம்மா

திட்டம் தீட்டி
போட்ட சட்டம் விட்டம் பார்க்குது
இளமையிலே வறுமை பார்த்து
வயிறு காயுது
பள்ளிக்கூடம் போகத்தானே ்
மனசு துடிக்குது
குடிக்கர தகப்பனோ தினம்
துட்டுக்கடிக்குது
ஆத்தாகாரி அழுகையில
மனசு வெடிக்குது
பள்ளிக்கூடம் மட்டம் போட
அழுகை விடைக்குது
வறுமை போக்க
வயிறு நிறைக்க என் ்
பிஞ்சு விரல் வேலை தேடுது
கல்லறுக்கும் வேலையிலே
காசு கிடைக்குது
கால் வயிற்று கஞ்சிகு தான்
அதுவும் பத்துது.
பீடி சுத்தும்
வேலை பார்க்க மனசு மறுக்குது
ஊதி தள்ளும் உங்களுக்கா
என் நிலமை புரியுது...
பொம்மை செய்யும் கம்பெனியில்
வேலை கிடைச்சது
நான் பொம்மையாகி
போன கதை யார்க்கு விளங்குது...
சிறு குழந்தை வருமானம்
தந்தைக்கினிக்குது
எதிர் கேள்வி கேட்காமல்
தாயும் நோகுது....
படைத்தவனை பார்த்திட தான்
கண்கள் தேடுது ்
என் தலையெழுத்தை மாத்த சொல்லி
கெஞ்ச தோன்றுது...

எழுதியவர் : சித்ரா ராஜ் (2-Mar-14, 6:49 pm)
பார்வை : 123

மேலே