சீரற்ற சமச்சீர் கல்வி

இந்திய அரசின் ஒவ்வொரு திட்டத்திற்கும் முன்னோடியாக இருக்கும் நமது தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கல்வி முறையான சமச்சீர் கல்வி திட்டமும் திட்டம் தீட்டபட்ட விதத்தில் வெற்றி பெற்றாலும் நடைமுறைபடுத்துவதில் வெற்றி பெற்றதா எனபது கேள்விக்குறியே.ஒரு வேளை இது முந்தைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த திட்டம் என்பதால் திட்டம் நடைமுறைபடுத்துவதில் தற்போது ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லையோ.. அப்படியானல் எப்பொழுது போல திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டியாவது நடைமுறைபடுத்திருக்கலாம் என்பது மக்களின் குரல். எது எப்படியோ இத்திட்டத்தினால் மாணவர்களும்,ஆசிர்யர்களுக்கு தான் இடர்பாடு என்று பார்த்தல் இப்பொழுது மிகப் பெரிய இடர்பாட்டில் இருப்பது என்னவோ பெற்றோர் தான்.
முன் இருந்த கல்வி திட்டத்தில் இருந்த
இடர்பாடுகளுள் முதலானது தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களும்,ஆங்கில வழி(மெட்ரிக்) கல்வி பயிலும் மாணவர்களும் வெவ்வேறு பாடத்திட்டத்தை பயின்று வந்தனர் என்பது. இராண்டாவது அதிக சுமையை மாணவர்கள் சுமக்க வேண்டி இருந்தது.
சமச்சீர் கல்வி திட்டம் வந்த பிறகு முதல் இடர்பாடு களையப்பட்டது என்றாலும் முக்கியமான இடர்பாடான சுமை களையபடவில்லை.சுகமான கல்வி சுமையானலும் சுமக்க மறுக்காமல் மாணவர்கள் தங்கள் எடைக்கு நிகரான எடையை சுமக்கின்றனர்.பாட ஏடுகளுடன் பயிற்சி மற்றும் செயல்பாடுகளின் தொகுப்பையும் சேர்த்து சுமக்கின்றனர். இங்கு தான் பெற்றோர்க்கு இடர்பாடுகள் தொடங்குகிறது.பள்ளியில் மாணவர்களிடத்தில் திணிக்கப்படும் பயிற்சிகள் யாவும் மாலையில் வீட்டில் பெற்றோர்களின் கைகளில் வாந்தியாக இருக்கும்.ஒவ்வொரு பயிற்சியையும்பெற்றோர் செய்ய மத்திய அரசுக்கு ஏற்படும் நெறுக்கடிகளை போல பல நெறுக்கடிகளை சந்திக்க நேரிடும் இச்சமயங்களில் மத்திய அரசினை போல மழுப்பல்கள் இருந்தால் குழந்தைகளின் அழுகுரல் ஆலமரத்தின் ஆனிவேரினை அசைத்து பார்த்து விட்டு வரும் என்பதறிந்த பெற்றோர் பல கட்ட போரட்டத்தினை கடந்து அதற்கான உபகரணங்களை வாங்க மாட வீதிகளிலும்,மாசி வீதிகளிலும் மாலை இருட்டும் முன் மாட்டை போல அலைந்து வாங்கி வந்து வெட்டல்,ஒட்டலை தொடங்கினால் உள்ளூரம் பயத்தினை தரும் பன்னிரண்டு மணியாகிவிடும் முடிப்பதற்கு.பிறகு காலை பாட்டினை சொல்ல வேண்டியதே இல்லை, மின்விசிறியாய் சுழன்று கிளம்பி பள்ளி, பணிகளுக்கு செல்லும் வரை.தனது பயிற்சி பணிக்கு இன்று பாரட்டு இருக்கும் என்று எண்ணி பயிற்சியை சமர்பிக்க செல்லும் மாணவர்களுக்கு மிஞ்சுவது என்னவோ ஏமாற்றம் தான்.காரணம் ஆசிரியர்கள் மறு நாள் சமர்பிக்க சொல்லிவிடுவர்.பிறகு குழந்தைகள் வீட்டிற்கு வந்தவுடன் உண்மை அறியும் பெற்றோரிடத்தில் நிச்சயம் ஆசிரியர்க்கு அர்ச்சனை இருக்கும்.காரணம் இரவெல்லம் இன்னல் பட்டது என்னவோ பெற்றோர் தானே.இதில் ஒரு நகைச்சுவை தரும்
விடயம் என்னவென்றால் அந்த ஆசிரியர்க்கும் ஒரு குழந்தை இருந்து இதே நிகழ்வு நிகழ்ந்தால் இன்னொரு ஆசிரியர்க்கு நிச்சயம் அர்ச்சனை இருக்கும். இத்தனை நகைச்சுவைகளுக்கிடையே மாணவர்கள் பயிற்சியில் இருந்து ஏதெனும் கற்றர்களா என்பது கேள்விக்குறியே.ஏனென்றால் பயிற்சியினை செய்திட பெற்றோர்கள் உள்ளனர் என்பதாலும், எது எழுதி இருந்தாலும் சரி எனக் கூறி திருத்தி தருவதாலும் கற்றலுக்கு வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது.மதிப்பெண்ணிற்காக தான் இந்த பயிற்சிகள் என்றால் இந்த பயிற்சிகள் என்றால் இந்த பயிற்சியும், இந்த கல்வி முறையும் தோல்வி தழுவிய ஒன்றே. ஆதலால் மத்திய அரசின் பத்தாண்டு ஆட்சியை குறைக் கூறும் மாநில அரசு தனது மூன்றாமாண்டு நிறைவிலாவது இத்திட்டத்தினை சரியான முறையில் நடைமுறைபடுத்த முயற்சி செய்தால் “சமச்சீர் கல்வியை சரி செய்த சரஸ்வதியே” என தொண்டர்கள்வாழ்த்து பலகை வைக்க வசதியாய் இருக்கும்.

எழுதியவர் : (2-Mar-14, 6:58 pm)
பார்வை : 530

மேலே