அரசியல் ஒரு சாக்கடை ஏன் எனில்

அரசு பள்ளி,அரசு பேருந்து,அரசு மருத்துவமனை இப்படி எதையுமே விரும்பாது,அரசு பணி,அரசின் சலுகைகள்,இலவசங்களை தற்போது அரசின் மட்டமான மதுவை விரும்பும் ஒவ்வொரு இந்திய இளம் குடிமகன்களின்(இவர்கள் பாரதிய குடிமகன்களா? அல்லது பார் குடிமகன்களா? என்பது கேள்விகுறியே) கூற்று அரசியல் ஒரு சாக்கடை.
அரசியல் ஒரு சாக்கடை தான்...ஏன்?
அரசியல் ஒரு சாக்கடை தான்...காரணம் நம் முந்தைய ஆட்சியாளர்களின் சுயநலம்.அதை மட்டும் காரணம் சொன்னால் சரியானதாக இருக்காதஇதற்கு மற்றொரு காரணம் இந்திய பாரதிய/பார் குடிமகன்களாகிய நாமும் தான்.
அரசியல் பற்றி என் சகோதரி ஒருவரிடம் கேட்ட பொழுது அவர் சொன்ன வரிகள் " அரசியல் என்பது நதி போல நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பய்க்கும் ஒன்று, ஆனால் இன்று அது ஒரு சிலருக்கு மட்டுமே நன்மை பய்க்கும் குட்டையாக மாறி இன்று அதன் புனித்தை இழந்து விட்டது ".என் நண்பன் ஒருவனுடன் உரையாடும் போது அவன் கூறிய கருத்து அரசியல் ஒரு சாக்கடை.ஏன் என நான் அவனை வினவிய போது அவனின் பதில் அது எல்லாம் தெரியாது ஆனால் அரசியல் ஒரு சாக்கடை.இந்த அறியாமைக்கு காரணம் அரசியல் என்றால் என்ன என்பதை உணராதது தான்.இவர்கள் பார்வையில் அரசியல் என்றால் ஆட்சியாளர்கள் அவர்கள் நலனுக்காக ஆடும் நாடகம்.இளைஞர்களாகிய நமக்கு விளையாட்டு,பொழுதுபோக்கில் இருக்கும் ஆர்வம் அரசியலில் இல்லை.பொதுவான எந்தவொரு செயலை செய்வதிலும் நமக்கு ஆர்வம் இல்லை, ஏன் என்றால் இந்த நிமிடம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,யார் எப்படி போனால் எனக்கு என்ன என்ற எண்ணம் தான்.இன்று வேறு ஒருவருக்கு நடந்த தீமை நாளைக்கு நமக்கு நடக்காது எனபது என்ன நிச்சயம்?...
சரி இதை விட்டுவிடுவோம் நாம் எத்தனை முறை குப்பைகளை சரியாக குப்பைத்தொட்டியில் போட்டிருப்போம்? இதற்கு அதற்கும் என்ன சம்பந்தம் என கேட்கலாம், அதற்கான விடை நம்மால் சின்ன சின்ன செயல்களில் கூட பொறுப்பில்லாமலிருப்பது தான் காரணம்.
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்புள்ளது என்பதை கருத்தில் கொள்ளாததே காரணம். இப்பொழுது விளங்குகிறதா? தவறு எங்கோ இருக்கும் ஆட்சியாளர்கள் மீது இல்லை,நம் மீது தான் என்று. இதற்காக தான் அந்த நண்பன் தன் மீது பழி வர கூடாது என்பதற்காக 49 பயன்படுத்தி ஓட்டளிக்க போவதில்லை என்றான்.இவன் ஓட்டளிக்க வில்லை என்றால் அரசியல் சுத்தமாகி விடுமா?
இல்லை 50 சதவித வாக்குகள் பதிவாயிருந்தாலும் ஏதோ ஒரு கூட்டம் (எது கூட்டமாய் வரும் என்று நமக்கு திரியும்)ஆட்சிக்கு வருவது உறுதி,அசுத்தம் ஆவது உறுதி. இதிலிருந்து அவனுக்கு பகுத்தறிவு இல்லை என்பது புரிகிறது. எனோ சத்துணவு தரும் பான நிறுவனங்கள் பகுத்தறிவு வளரும் படியாக இன்னும் ஒரு பானத்தை அறிமுகபடுத்தவில்லை. அப்படி அறிமுக படுத்தினால் அதை பருகி ரமேஸ்(வெறு யாரும் இல்லை ஒரு அழகு தேவதை வளர்க்கும் நாயின் பெயர்) பகுத்தறிவு வளர்த்து கொள்ளும் ஆனால் நமக்கு வளருமா? என்பது சந்தேகம் தான்.
இந்த சமயம் மீண்டும் ஒரு நல்ல ஒரு கேள்வி பகுத்தறிவை வளர்த்து நான் எந்த தேர்வை எதிர் கொள்ள போகிறேன்? இதற்கு காரணம் மொழியை அறிவாக பயிற்றுவிக்கும் பெற்றொர்,ஆசிரியரின் தவறே.மேலும் சொல்ல போனால் வணிக மொழியை அறிவாக கற்று தாய் மொழியை மொழியாக கூட கற்காத நிலையும் ஒரு காரணமே.இதனால் தான் ஆட்சியாளர்களின் வாரிசும் தமக்கென்று புதிய பாதையை வகுக்காமல் வணிகத்திற்கு (அரசியலின் தற்போதைய பெயர்)வருகின்றனர்.
ஆட்சியாளர்களுக்கு ஏன் தகுதிகள் நிர்ணயிக்க படவில்லை என்பது நமது மற்றொரு கருத்து.நமக்காக நம்மில் ஒரு நன்பகமானவரை பொதுபணி ஆற்ற அனுப்புவது தான் அரசியல்.அதாவது பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்ற ஒருவர் தான் ஆட்சி பணிக்கு வந்துள்ளனர்.அந்த அடிப்படையில் தான் அன்றைய திரை நட்சத்திரங்கள் பலர் ஆட்சிக்கு வந்துள்ளனர்.இவர்கள் ஆட்சிக்கு வந்தமைக்கு காரணம் இவர்கள் திரை ஏற்ற கதாபத்திரங்கள் தான் அதனால் தான் அன்றைய மக்களின் மனதிலும்,ஆட்சியிலும் இவர்கள் இடம் பிடித்தனர்.இந்நிலைக்கு அன்றைய மக்களின் கல்வியறிவு இன்மையும் ஒரு காரணமே.ஆனால் இன்று அதிகளவில் கல்வியறிவு பெற்ற ஒவ்வொரு குடிமக்களின் எதிர்பார்ப்பும் திரை நட்சத்திரங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது,இதை கேட்கும் பொழுது அவர்களே அறிவாளிகள் என சிந்திக்க தோன்றுகிறது.நாம் தேர்ந்தெடுக்க கூடிய ஒருவர் இந்தியாவின் அனைத்து துறை செயல்களிலும் ஆர்வம் காட்ட கூடியவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் திரை துறை பற்றி மட்டுமே அறிந்த ஒருவரை எப்படி ஆட்சியாளராக அமர்த்துவது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.அவர்கள் திரையில் செய்யும் ஒவ்வொரு செயலும் வெறு ஒருவர் எழுதி வடிவமைத்த ஒன்றே. இப்படி எவரோ சிந்தித்த சிந்தனைகளுக்கு உடல் கொடுக்கும் நபரை ஆட்சியில் அமர்த்த எண்ணுவதால் தான் அரசியல் இன்று சாக்கடை என்பதை கடந்து கூவம் என பெயர் பெற சென்று கொண்டிருக்கிறது. மேலும் இதனை தடுக்க வேண்டுமென்றால் ஆட்சிக்கு வருவோருக்கான தகுதி நிர்ணயிக்கபட வேண்டும்.
இப்படி எந்த தகுதிகளும் நிர்ணயிக்கப்படாத காரணத்தால் தான் ஆட்சியாளர்கள் அரசியல் உலக அரங்கில் பல நகைச்சுவைகளை புரிந்து கொண்டிருக்கிறது.இன்றைய ஆட்சியாளர்களின் சில நகை துண்டும் செயல்கள், 58 வயது ஆனால் நாம் விரும்பும் அரசு பணியிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவிடுவர் ஆனால் 60 வயதானவர் தான் கட்சியின் இளைஞர் அணிக்கு தலைவர், 18 வயது ஆனால் தான் ஓட்டுரிமை வழங்கப்படும் ஆனால் 14 வயதிலியே இளைஞர் அணியில் உறுப்பினர் அட்டை வழங்கபடும்.இந்தியாவில் அதிகளவில் தொழிற்சாலைகளை நிறுவிய குஜராத் மாநில முதல்வர் இந்தியாவின் முதுகெழும்பாம் விவசாயம் அழிவதற்கு காரணம் என்று மத்திய அரசின் பொருளாதார கொள்கை என்கிறார்,தேசிய அளவில் ஊழல்களை செய்த காங்கிரஸ் அரசு கர்நாடகவில் ஆட்சியை பிடித்து விட்டு மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிப்போம் என்று தமிழக அரசின் மதுவை உண்ட குடிமகனை போல் எதிர் கட்சியாம் பா.ஜ.க.வை விமர்ச்சித்து கொண்டிருக்கிறது.இவை அனைத்தும் நகையை தூண்டும் செயல்கள் தான் ஆனால் இதற்கு நாம் சிரித்தால் நம் பொழப்பு சிரிப்பாய் சிரித்துவிடும்.
நாம் விரும்பும் வணிக மொழியின் தாய் நாடான இங்கிலந்தின் ஆட்சியிலும் சில இளம் பெண்களும் பங்கு வகிகின்றனர்.ஆனால் இங்கு மக்கள் பணியில் இருக்கும் சில பெண்களோ தங்கள் கணவர்களின் எழுதுகோளாக மட்டுமே இருக்கின்றனர், இல்லையேல் அடிமையாக ஆண்களை மாற்றி ஆட்சி புரிகின்றனர். அடிமைத்தனம் இல்லாத ஆட்சி தான் மக்களாட்சி, அதை நம் கருத்தில் கொண்டாலே நம்மை அடிமையாக்க அன்னியன் என்ன மாட்டான். நம்முள் இருக்கும் பாகுபாடும் அடிமை எண்ணமும் தான் எவனையோ நம்மீது ஆதிக்கம் கொள்ள வைக்கிறது. அதை மாற்ற......

அரசியல் ஒரு சாக்கடை...எனில்..
அரசியல் ஒரு சாக்கடை...எனில் எவரையும் குறை கூறாமல் சாக்கடையை உருவாக்கி பெருக்கிய பெருமையை ஏற்று கொண்டு அதை சுத்தம் செய்திட பன்னி கூட்டதோடு போராட இறங்குவோம்.ஒற்றுமையே பலம்,அதிகாரங்கள் அனைத்தும் மக்களுக்கே என்னும் பொன்மொழிகளோடு அடிமைகளே இல்லாத புதிய நம் நாட்டிற்கு நாமே மன்னர்களாய ஆவோம்.இன்னும் நினைவிலிருக்கிறதா "மக்களால் மக்களுக்காக நடக்கும் ஆட்சி மக்களாட்சி" என்று.அதை உண்மையாக்க அடிமை தனத்திலிருந்து வெளியே வா. நான் அடிமையாக இல்லை என கருத்து கொண்டிருந்தால், அடிமையாக வேண்டமென்றால் வெளியே வா..உன் குடியுரிமையை மீட்டெடுக்க வா. இல்லையேல் இங்கு மீண்டும் ஒரு சுதந்திர போர் தொடங்கும்.
அனைத்து துறையிலும் மாற்ற கண்ட நாம் ஏன் இந்திய ஆட்சியில் மாற்ற காண மறுக்கிறோம்.நாம் விரும்பும் மாற்றத்தை நம்மிலிருந்தே தொடங்குவோம்.


வலிமையான பாரதம் படைப்போம்.உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்போம்.

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (2-Mar-14, 7:05 pm)
பார்வை : 983

மேலே