எது சரி நீ சொல்வாய்

பூவிதழ் விரித்த போது
மலர் என்றேன்
பூவிதழ் மலர்ந்த போது
புன்னகை என்றேன்
கவிந்த இரு விழிகள்
கவின் அந்திக் கவிதை என்றேன் !
இவன் காதல் என்கிறான் !
விழிகளில் மாலையும்
இதழ்களில் மௌனமும்
ஏந்தி நிற்கும் இளம் பாவாய் !
எது சரி நீ சொல்வாய் !

இதயங்கள் இரண்டிலும்
இருப்பதால்
இரண்டும் சரியென்றாள் !

காதலன் காத்திருக்கிறான் !
நான் என்வழி நடக்கிறேன் !

காதலன் அவன் காத்திருப்பான்
கவிஞன் நீ காத்திருக்கமாட்டாய்
இன்னும் ஒரு கவிதை சொல் என்றாள் !

இரு உள்ளங்களும் இணைந்து நிற்கட்டும்
ஒன்றென்ன ஒரு நூறு தருகிறேன்
என்று சொல்லி நடந்தேன்
அவள் மெல்லச் சிரித்தாள் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Mar-14, 9:25 am)
பார்வை : 131

மேலே