காதலில் விழுந்தேன்

எனக்காக கவிதைகள்
எழுதிய கைகள் அது..!

என்னை பற்றிய
நினைவுகளை மட்டுமே சுமந்த நெஞ்சம் அது ..!

நான் பார்க்கும் ஒற்றை பார்வைக்கு
தவம் இருக்கும் கால்கள் அது..!

ஊர் கூடி இருந்தாலும்
என்னை கண்டு பிடிக்கும்
அதிசயபிறவி அவன் கண்கள் ..!

புவிஈர்ப்பு விசையை விட
அவன் விழி ஈர்ப்பு விசை அதிகம்..!
அதனால்தான் என்னவோ
புவியில் நடக்க முடிந்த எனக்கு
அவன் காதலில் விழ மட்டுமே தெரிந்தது .!!!

எழுதியவர் : ரம்யா எம் ஆனந்த் (3-Mar-14, 9:05 am)
பார்வை : 226

மேலே