கணவனாய் ஆசைக்காதலன்

விடிய கால வேலையில, வெள்ளாம வீதியிலே
பாட்டு பாடி நானும் வாரேன் தங்கமே....
என் கொஞ்சும் கிளி பேச்ச கேக்க வைரமே..!

கட்ட வண்டி பூட்டிக்கிட்டு, பட்டு வேட்டி கட்டிக்கிட்டு
ஆட்டமாடி நானும் வாரேன் செல்லமே ....
இப்போ கெட்டி மேளம் கொட்ட போறேன் வெல்லமே..!

கூடி வந்த சனங்க இங்க, வந்த சேதி சொல்லும் முன்னே ஓடி வந்து கட்டிக்கடி கன்னியே....
நீ கட்டலின்னா நானும் இங்க ஒண்டியே...!

நேரம் தள்ளி போனாலும், இன்று நாளை ஆனாலும்
உன்ன விட்டு போக மாட்டேன் அன்னமே....
வேற பொண்ண நானும் பாக்க மாட்டேன் என்றுமே...!

நீ இல்லீன்னா உன் மச்சான் நானும் இல்லையே....!

எழுதியவர் : அர்ஜுனன் (3-Mar-14, 11:17 am)
சேர்த்தது : அர்ஜுனன்
பார்வை : 423

மேலே