ஆசை ஆசையாய்

உன் கண்கள் கண்டேன்
என் இமைகள் பறிபோனது !
நீ சிரித்தாய் ,
பேச்சிழந்தேன்!
உன் இதழ் பிரியாப்
புன்னைகை இடித்துவிட்டது
என் மனக் கட்டுப்பாடுகளை !
மதி இழந்து போனேன்
மன்னவனின் நிழல்
கண்டபோதெல்லாம் !
யாரும் அறியா
பொக்கிஷமென பூட்டி
வைத்தேன், என்
நெஞ்சுக் கூட்டில்
உந்தன் திருமுகத்தை !
உன் பாதையில்
கவனமாய் இருக்கிறேன் ,
என் வழி மறந்து !
நிஜங்களை விட
உன்னைப் பற்றிய நினைவுகளே
மிக அழகிய தருணங்கள்
என் கனாக்களில் !
உன்னை நேரில்
பார்த்தாலும்
நினைவில் கண்டாலும்
வேறுபாடில்லை!
ஆசை ஆசையாய்
காதலிக்கிறேன் ,அருகில்
நீ இன்றிப் போனாலும்
விழி மூடி அதில்
உன்னை வைத்து !!