காதலைலிப்போம் வா அன்பே

காதலென்பதின் மறுபெயர்
அன்பென்று சொன்னால்
வயோதிகமும் வாலிபமும்
அங்கே வரையறையல்ல
காமமென்பதும் காதலே
கருத்தொருமிப்பதும் காதலே
வார்த்தை வருவதில்லை
கண்கள் பேசும்போது
கண்கள் பேசுவதில்லை
உதடுகள் உறவின்போது
உதடுகள் பேசுவதில்ல
உணர்சிகள் உரசும்போது
உண்மையான காதலோ
உணர்சிகளை தாண்டி
உள்ளங்கள் ஒருமித்து
உயிர் வாழும் காலம்வரை
உயிரோடு வாழும் காதல்
உண்மை அன்பின் அடையாளம்
இளமை காதலின் இறுக்கம்
முதுமை காலத்தின் மூர்க்கம்
வயோதிகத்தின் காதல்தான்
வாலிப காதலின் வழிகாட்டி
தன்னலமில்ல உள்ளங்களில்
தள்ளாடும் வயதிலும் காதல்
அது அழிவதுமில்லை !!!!
அழிக்கப்படுவதுமில்லை ???
காதலோடு காதலாய் உன்னோடு,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.....