சிவகாசி சிரிப்பொலி

வாழ்க்கை நாடகத்தில்
வருஷநாட்கள் தள்ள
ஓலை கொட்டகையில்
ஒப்பனையாய் மருந்துபூசி
மூலை முடுக்கெள்ளாம்
முளைத்தது போல்பட்டாசு
பானைசோற்றுடனும்
கந்தகமும்,கரிமருந்தும்
மானம் மட்டும் போகாது
மரணமே வந்தாலும்- இன்று
நாளைத்தள்ளிவிட்டோம்...
நாளை எப்படியோ? - கொடிய
மத்தாப்பு கட்டினிலே
மானிடம் உறங்கியெழும்
சிவகாசி சங்கடங்கள்- என்றுதான்
சிரிப்பொலியாய் மாறிடுமோ?

எழுதியவர் : சிவகவி (4-Mar-14, 4:51 pm)
சேர்த்தது : சிவகவி
பார்வை : 80

மேலே