சிந்திவிட்ட தேன் கவிதை

அன்னையும்
பிள்ளையும்
பேசிக்கொள்ளும்
மழலை.. கவிதை..!!

அறிவியலும்
ஆன்மீகமும்
உரசிக்கொள்ளும்
பொறி.. கவிதை..!!

கண் இமைக்கும்
கரிய மைக்கும்
இடைப்பட்ட
அழகு.. கவிதை..!!

காதலனும்
காதலியும்
பரிமாறும்
மொழி.. வகவிதை..!!

பூவும்
காற்றும்
கூடிய
தீண்டல்.. கவிதை..!!

பனித்துளி
ஒளிகொண்டு
சிரிக்கின்ற
பொழுது.. கவிதை..!!

மண்ணோடு
விதைகொண்ட
போராட்டத்
துளிர்.. கவிதை..!!

மரம்விட்டு
உதிர்கின்ற
சருகுகளின்
சோகம்.. கவிதை..!!

மடைததும்பி
தெறிக்கின்ற
தண்ணீரின்
வளமை.. கவிதை..!!

நிலவொளியில்
விரிகின்ற
ஆந்தையின்
சிறகுகள்.. கவிதை...!!

நீலவானில்
சிதறிக்கிடக்கும்
வெண்மேக
ஓவியங்கள்.. கவிதை..!!

எண்ணத்திற்கும்
கற்பனைக்கும்
இடைப்பட்ட
சிந்தனை.. கவிதை..!!

ஏட்டிலும்
எழுத்திலும்
சிந்திவிட்ட
தேன்.. கவிதை..!!

இப்படி..

மெய்யுடன்
உயிர் இணைந்து
சிலிர்த்திடச் செய்யும்
கருவெல்லாம்.. கவிதை..!!

எழுதியவர் : வெ கண்ணன் (4-Mar-14, 5:35 pm)
பார்வை : 267

மேலே