சிவாய சிவ ஓம் -கார்த்திக் ,நெல்லை

ஓங்கிடும் கீதமே
ஓமெனும் நாதமே
பாய்ந்திடும் மனதினிலே
சிவசிலாக்கியம் வந்திடுமே !!!!
பம்பை இசைக்கிறான்
பரதமும் ஆடுகிறான்
சிவநித்திரை எய்திடவே
சிவயோகம் செய்வாய் நெஞ்சே!!!
காரணம் ஆனவன்
அண்டத்தின் அணுவும் ஆனவன்
சங்கொலி இசைக்கவே
நடுநிசியினில் நர்த்தனம் ஆடுகிறான் !!!
சாம்பலை பூசிக்கொண்ட
சுடலை வாசன் அவன்
சிவதவத்தினில் அமர்வோர்க்கு
கடுஞ்சாவை பிரித்தெறிவான் !!!
.........ஓங்கிடும் கீதமே
........ஓமெனும் நாதமே
........பாய்ந்திடும் மனதினிலே
........சிவசிலாக்கியம் வந்திடுமே !!!!
என்றும் அன்புடன்
கார்த்திக்