என் அலைபேசி நிமிடங்கள்-1

நொடிகொருமுறை
என் அலைபேசியை
துலாவி பார்க்கிறேன்
உன் குறுஞ்செய்தி
வந்திருக்கிறதா என்று !!

நீ அழைக்காத நேரத்திலும்
உன் அழைப்பு பதிவை
முறைத்து கொண்டிருக்கிறேன்
என்னைப்போல் நீயும்
தவித்து ஒருமுறை
என்னை அழைக்கமாட்டாயா என்று...!!

நம் அழைப்பை முடிக்க
நீ முற்படும்போது தான்
எனக்குள் எத்தனை தவிப்புக்கள் தெரியுமா..?
மீண்டும் எப்போது அழைப்பாய்....??!

சத்தம் இல்லாத தொலைப்பும்
சொல்ல தெரியாத தவிப்பும்..
உன் முகம் பார்க்க நினைப்பதில்!

தொலை தூரத்தில்
நீ இருக்கிறாய் என்றால்
கேட்கவா செய்கிறது
இந்த பொல்லாத இதயம் ..?
இது என் அலைபேசிக்கு தெரியும்
ஆனால்..இதுவரை உனக்கு
சொல்லாமல் இருப்பதும் ஏனோ...?

உன்னோடான என் அன்பை
சரியாக சொல்லி
உனக்குள் வார்த்தைகளாக
கொண்டுவந்து விட கூடாதா...
நினைத்து பார்கின்றேன்
நம் அலைபேசி நிமிடங்களை....

அன்பே!

மழை நின்ற நேரத்திலும்
அமையாமல் தொடரும்
தூரல் போல -
மௌனமான நேரத்திலும்
மறக்காமல் தீயாய்
எரிந்து கொண்டிருகிறது
உன் நினைவுகள்.!

என்னை கவனிப்பவர்களுக்கு
நான் அலைபேசி பைத்தியம்
ஆனால்-
எனக்கு தானே தெரியும்
உன் அன்புகிற்காய் தவிக்கும்
ஒரு பறவை என்று....

எழுதியவர் : சபரி ஷீபா (6-Mar-14, 12:05 pm)
பார்வை : 348

மேலே